Last Updated:
போரைத் தவிர்த்து, சர்வதேசச் சட்டங்களின் மூலம் ஈரானைக் கட்டுப்படுத்தவும், ஏற்பட்ட இழப்புகளுக்கு நிதி ரீதியான தீர்வைப் பெறவும் கத்தார் முயற்சிக்கிறது
ஈரான் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கேட்டு ஐநா-விடம் கத்தார் நாடு முறையிட்டுள்ளது.
ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக தீவிர சண்டை ஏற்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் அமெரிக்க படைகளுக்கு தளங்களை அளித்ததாக கூறி கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஈரான் ஏவிய ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் கத்தாரின் உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கத்தார் குற்றம் சாட்டுகிறது. இந்தச் சேதங்களுக்கு முழுப் பொறுப்பேற்பது ஈரானின் கடமை என ஐக்கிய நாடுகள் அவையிடம் கத்தார் வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் கத்தார் ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் எரிசக்தி மையமாக உள்ளது. ஈரானுக்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் போட்டியின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன.
ஈரான் சமீபகாலமாகத் தனது அண்டை நாடுகள் மீது ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, கத்தாரின் முக்கியப் பொருளாதாரப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அந்த நாட்டின் அமைதியைச் சீர்குலைத்துள்ளன.
கத்தார் உலகின் முன்னணி இயற்கை எரிவாயு ஏற்றுமதி நாடாகும். இத்தகைய தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியைப் பாதிக்கக்கூடும் என்பதால், சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனித்து வருகின்றன
கத்தார் அரசு ஐ.நா சபையிடம் முறையிட்டுள்ளது ஒரு முக்கியமான ராஜ ரீதியிலான நகர்வாகும். போரைத் தவிர்த்து, சர்வதேசச் சட்டங்களின் மூலம் ஈரானைக் கட்டுப்படுத்தவும், ஏற்பட்ட இழப்புகளுக்கு நிதி ரீதியான தீர்வைப் பெறவும் கத்தார் முயற்சிக்கிறது.
Iran vs Qatar : ஈரானிடம் இழப்பீடு கோரும் கத்தார்.. தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐ.நா.-விடம் முறையீடு

