உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, ஈரானின் ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. ஆனால் இப்போது இங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேற்கொண்டு இந்த கண்ணிவெடி தாக்குதல் நிலவுவதால், நிலைமை இன்னும் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது. கப்பல் போக்குவரத்து சீராகும் வரை, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் தங்கள் தரைவழி பைப்லைன்கள் மூலம் கச்சா எண்ணெயைச் செங்கடல் பகுதிக்குக் கொண்டு சென்று அங்கிருந்து ஏற்றுமதி செய்யலாம். ஆனால் அதிலும் கொள்ளளவு பற்றாக்குறை, செங்கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல், செலவு மற்றும் நேரம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளன. எனவே பைப்லைன்கள் ஒரு தற்காலிகமான மற்றும் சிறிய அளவிலான தீர்வாக மட்டுமே இருக்க முடியும். உலகப் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்ப ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாகத் திறக்கப்படுவதே ஒரே நிரந்தரத் தீர்வு.

