இந்நடவடிக்கைகளை, ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்று பெயரிட்டு நடத்தி வருகிறது இஸ்ரேல். இதன்கீழ் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்தி தளங்கள், உதிரிபாகத் தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், அதனுடன் தொடர்புடைய விநியோகச் சங்கிலிகள் ஆகியவை திட்டமிட்டு குறிவைக்கப்பட்டுள்ளன. ஈரானின் தொழில்துறை தளங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதால், டெஹ்ரான் மீண்டும் அவற்றை உருவாக்கும் திறன் கடுமையாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.


