இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “நான் இணையலாம் இணையாமலும் இருக்கலாம். அதாவது நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.

இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலால் ஈரானிய அரசு சரிந்துவிடுமா என்றால்… நிச்சயமாக, எதுவும் நடக்கலாம். ஆனால், ஈரானின் ஃபோர்டோ அணு நிலையத்தை அழிக்கும் திறன் கொண்டவர்கள் நாங்கள் மட்டுமே. அத்னால் நான் அதைச் செய்யப் போகிறேன் என்று அர்த்தமல்ல” என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தெளிவில்லாமல் பூடகமாகவே பதிலளித்திருக்கிறார்.
இதற்கிடையில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர்கள் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக நாளை ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியைச் சந்திக்க உள்ளனர்.

