Last Updated:
ஈரான் வீசிய ஏவுகணை தகர்க்கப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய கமெண்ட் அறிவித்துள்ளது.
குவைத் மற்றும் பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதலைத் தொடங்கி உள்ளது.
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்களது அறிவுரையை மீறி எண்ணெய் கப்பல் சென்றதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தவிருந்த தாக்குதலைத் தடுக்கும் வகையில் ஈரானின் கெஷ் தீவில் ஏவுகணைகள் வீசி தாக்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
குவைத்தில் ஈரான் தாக்குதல்
இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் அமெரிக்க ஹெலிகாப்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்தது. ஆனால் ஈரான் வீசிய ஏவுகணை தகர்க்கப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய கமெண்ட் அறிவித்துள்ளது.
Jun 03, 2026 10:29 AM IST


