Last Updated:
இந்த இறுதிச்சடங்களில் சுமார் 2 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டாவும், பிகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைனும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், போர்ச் சூழல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கடந்த வாரம், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் பிரதிநிதிகளாக பவித்ரா மார்கெரிட்டாவும், சையத் அதா ஹஸ்னைனும் பங்கேற்பார்கள் என வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு… இந்தியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கும் என அறிவிப்பு!


