• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran: ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்.. ஆபத்தா? – அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதென்ன?

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Iran: ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம்.. ஆபத்தா? – அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜூன் 13, 2025 அன்று இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும்,

ஜூன் 21, 2025 நள்ளிரவில் அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கும் காரணம் ஒன்று தான்!

அது, ‘ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நோக்கி நகர்கிறது. இது நடந்தால் உலகிற்கு ஆபத்து‘.

ஆக, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே குறி வைத்தது ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தான். இஸ்ரேல் இன்னும் ஒரு படி மேலே போய் ஈரான் நாட்டின் அணு ஆராய்ச்சியாளர்களையும் கொன்றது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்

ஒரு வாரத்திற்கு முன்பு ஆய்வு…

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு தான், சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட்டது.

அப்போது ஈரானில் 400 கிலோ கிராம் அளவிற்கு 60 சதவிகிதத்திற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்துள்ளது. இதை 90 சதவிகிதம் அளவிற்கு செறிவூட்டினால் 10 அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும்.

ஆனால், இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியப் பின், ஈரான் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் சோதனையை அனுமதிக்கவில்லை.

Israel Iran Ceasefire: Qatar US Base Attack தான் போர் நிறுத்தத்திற்குக் காரணமா? | Trump | Decode

அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்கா ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளைக் குறி வைத்து தாக்கியது.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு பின், அங்கே இருந்த ‘400 கிலோ கிராம் யுரேனிம் எங்கு போனது?’, ‘என்ன ஆனது?’ என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் உள்ளிட்ட யாருக்கும் தெரியவில்லை. இதை அந்த நிறுவனத்தின் தலைவர் தலைவர் ரஃபேல் க்ரோஸியும் உறுதி செய்துள்ளார்.

அவற்றை ஈரானே மறைத்து வைத்திருக்கலாம் என்றும் க்ரோஸி கூறுகிறார்.

சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி
சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி

எழுந்துள்ள சந்தேகங்கள்…

400 கிலோ கிராம் யுரேனியம் காணாமல் போனதையொட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைக்கும் இரண்டு காரணங்கள் இதோ…

ஒன்று, ஈரானின் இஸ்ஃபஹான் அருகில் உள்ள ரகசிய நிலத்தடிப் பகுதியில் இந்த யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்திருக்கலாம். இதை இஸ்ரேலின் உளவுத்துறை கூறுகிறது.

இன்னொன்று, இந்த யுரேனியங்கள் தாக்குதலால் சிதிலமடைந்தப் பகுதிகளுக்கு கீழ் புதைந்து கிடக்கலாம். அதனால் தான், அதை இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸின் கூற்று.

முதலாவதாக சொல்லப்பட்ட காரணம் உண்மையாகும் பட்சத்தில், ஈரான் மீண்டும் அதை எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் ஆதாரம்

ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளின் ஒன்றான ஃபோர்டோவின் வெளியே 16 லாரிகள் நின்றிருந்தது. இது அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களில் தெளிவாகிறது.

ஆனால், தாக்குதலுக்கு பின்னான சாட்டிலைட் புகைப்படங்களில் இந்த லாரிகள் காணப்படவில்லை. அதனால், யுரேனியத்தை ஈரான் இந்த லாரிகள் மூலம் எங்காவது கொண்டு சென்று மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாகிறது.

ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல்

வர உள்ள பிரச்னைகள்

ஜே.டி வான்ஸ் சொல்வதைப் போல, யுரேனியல் சிதிலமடைந்தவற்றிற்கு கீழ் இருந்தால், அது வெளிவரும் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

அப்படி இல்லாமல், ஈரான் அதை பத்திரமாக மறைத்து வைத்திருந்தால், அதை மீண்டும் அந்நாடு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

400 கிலோ யுரேனியம் எங்கு போனது? அது புதைந்திருக்கிறதா அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? போன்ற உண்மைகள் வெளியே வரலாம்… வராமலும் போகலாம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஏன்? அமெரிக்கா தலையிடுமா? – முழுமையான அலசல்! | களம்: Iran vs Israel

Read More

Previous Post

மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்ய நினைப்பவரா நீங்க…? PPF vs SIP எதை தேர்வு செய்யலாம்…?

Next Post

தந்தையைக் கொலை செய்ததாக நம்பப்படும் மகன் கைது | Makkal Osai

Next Post
தந்தையைக் கொலை செய்ததாக நம்பப்படும் மகன் கைது | Makkal Osai

தந்தையைக் கொலை செய்ததாக நம்பப்படும் மகன் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin