Last Updated:
அவரை வாங்க டெல்லியும், லக்னோவும் கடுமையாக ஏலத் தொகையை உயர்த்தின. 11 கோடி ரூபாயை கடந்து இரு அணிகளும் போட்டி போட்டன.
சென்னை அணி விடுவித்த வீரரை வாங்குவதற்கு ஐபிஎல் மினி ஏலத்தில் கடுமையான போட்டி ஏற்பட்டது. இறுதியாக கொல்கத்தா அணி அவரை ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் விடுவித்த மற்றும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளிலும் மீதம் இருக்கும் இத்தொகையை வைத்து தற்போது மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் 64 கோடியே 30 லட்சம் ரூபாயும், சென்னை அணியிடம் 43 கோடியே 40 லட்சம் ரூபாயும் இருப்பில் இருந்தன.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்குவதற்கு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி காணப்பட்டது. இந்த போட்டியில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுடன் சென்னை அணியும் குதித்தது. கேமரூன் கிரீனை வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் வரை தருவதற்கு சென்னை அணி முன் வந்தது.
இருப்பினும் அதைவிட கூடுதலாக 20 லட்சம் ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கிக்கொண்டது. தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தின் போது சென்னை அணி விடுவித்த வேகப்பந்துவீச்சாளர் இலங்கை சேர்ந்த மதீஷா பதிரனாவை வாங்குவதற்கு கடுமையான போட்டி காணப்பட்டது.
அவரை வாங்க டெல்லியும், லக்னோவும் கடுமையாக ஏலத் தொகையை உயர்த்தின. 11 கோடி ரூபாயை கடந்து இரு அணிகளும் போட்டி போட்டன. ரூ.16 கோடி வரை ஏலம் வந்த போது டெல்லி ரேஸில் இருந்து விலகிய நிலையில் இறுதியாக ரூ.18 கோடி கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. டெத் ஓவர்கள் எனப்படும் 16 முதல் 20 ஓவர்கள் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர் என்பதால் பதிரனாவுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
December 16, 2025 4:43 PM IST


