Last Updated:
தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 43 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் கொடுத்தார்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குஜராத்தின் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் அதிரடியாக விளையாடி 1 சிக்சர், 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். மயங்க் அகர்வால் 24 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 26 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.
லிவிங்ஸ்டோன் 25 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 43 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் கொடுத்தார். ஜித்தேஷ் சர்மா 10 பந்துகளில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்துள்ள ஆர்சிபி அணி 190ரன்கள் எடுத்திருக்கிறது. பஞ்சாப் அணியின் தரப்பில் கைல் ஜேமிசன், சிறப்பாக பந்துவீசி ஆர்சிபி அணியின் முக்கிய விக்கெட்டுகளான பிலிப்ஸ் சால்ட், கேப்டன் ரஜத் பட்டிதார் மற்றும் லிவிங்ஸ்டன் விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.
June 03, 2025 9:29 PM IST


