Last Updated:
மதியம் தொடங்கும் இந்த ஏலம் இரவு 8 மணி வரை நீடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
350-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெறுகிறது. இதனை நேரலையில் பார்ப்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக 18 சீசன்கள் நிறைவுற்று அடுத்த ஆண்டு 19வது சீசனில் அடி எடுத்து வைக்க உள்ளது. உலகின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் தொடராக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மாறி உள்ளது.
இதனை பின்பற்றி ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு மினி ஏலம் இன்று அபுதாபியில் மதியம் 2:30 மணி அளவில் தொடங்க உள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன.
அதன் அடிப்படையில் கொல்கத்தா அணியிடம் அதிகபட்ச தொகை இருப்பில் உள்ளது. அந்த அணி 64 கோடியே 30 லட்சம் ரூபாயும், சென்னை அணி 43 கோடியே 40 லட்சம் ரூபாயும் இருப்பில் வைத்துள்ளன. மதியம் தொடங்கும் இந்த ஏலம் இரவு 8 மணி வரை நீடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
December 16, 2025 2:00 PM IST


