Last Updated:
சுழற்பந்துவீச்சாளராகவும் ஒவ்வொரு போட்டியிலும் 4 ஓவர்களை வீசக்கூடிய திறமை இவருக்கு உள்ளது
ஆர்சிபி அணி விடுவித்த வீரர் நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இன்றைக்கு மினி ஏலம் அபுதாபியில் நடைபெற உள்ளது.
மதியம் 2:30 மணியளவில் இந்த ஏலம் தொடங்கும். ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று தங்களுக்கான வீரர்களை வாங்க உள்ளன. அவற்றில் கொல்கத்தா அணிவசம் 64 கோடியே 30 லட்சம் ரூபாயும், சென்னையிடம் 43 கோடியே 40 லட்ச ரூபாயும் உள்ளது. வீரர்களை பொறுத்த அளவில் 2 வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் முதலிடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன்.
பேட்டிங் மற்றும் பவுலிங் பவுலிங் சிறப்பான ஆட்டத்தை இவர் டி20 ஃபார்மேட்டில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பல்வேறு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது. அத்துடன் எந்த ஒரு பேட்டிங் வரிசையிலும் களம் இறங்கி ரன் குவிக்கும் திறமை கொண்டவராகவும் கேமரூன் கிரீன் இருக்கிறார்.
அவரைப் போன்று மற்றொரு ஆல்ரவுண்டரான ஆர்சிபி அணி விடுவித்த இங்கிலாந்து அணியைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் உள்ளார். இவர் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடி பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
இருப்பினும் முக்கியமான ஆட்டங்களில் கைகொடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். குறிப்பாக இறுதிப்போட்டியில் இவரது ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவியது.
December 16, 2025 1:43 PM IST


