Last Updated:
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரிஷப் பந்த். அவரை லக்னோ அணி கடந்த சீசனில் 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உலகில் நடைபெறும் வெற்றிகரமான கிரிக்கெட் லீக்குகளில் முதன்மையானதாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மாறியுள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு 19ஆவது எடிஷனாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது. இதனையொட்டி சமீபத்தில் ஐபிஎல் அணிகள் தாங்கள் விடுவித்த மற்றும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து மினி ஏலம் என்று அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் சுமார் 64 கோடி வரையில் கையிருப்பு தொகை வைத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படும் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை 25 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மூன்றாவது வீரராக கேமரூன் கிரீன் உள்ளார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரிஷப் பந்த். அவரை லக்னோ அணி கடந்த சீசனில் 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இரண்டாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார். அவரை கடந்த தொடரில் பஞ்சாப் அணி 26 கோடியே 75 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது.
மூன்றாவது இடத்தில் தற்போது கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டுள்ள கேமரூன் கிரீன் உள்ளார். 2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க்கை 24 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியது. ஐந்தாவது இடத்தில் வெங்கடேஷ் ஐயர் உள்ளார். அவரை கடந்த சீசனில் கொல்கத்தா அணி 23 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
2024 தொடரில் பாட் கம்மிங்ஸை சன்ரைசர்ஸ் அணி 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், 2023 பஞ்சாப் அணி சாம் கரணை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் வாங்கி இருந்தன. 2025 இல் சாகல் மற்றும் அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது.
December 16, 2025 5:06 PM IST


