Last Updated:
மற்றொரு Uncapped Player பிரசாந்த் வீரையும் சென்னை அணி ரூ. 14.20 கோடிக்கு வாங்கி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அபுதாபியில் நடைபெற்று வரும் மினி ஏலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த இளம் வீரரை ரூ 14.20 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரையொட்டி தற்போது மினி ஏலம் அபுதாபியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வீரர்களை விடுவித்தது போக சென்னை அணியிடம் ரூ. 43 கோடியே 40 லட்சம் இருந்தது.
இந்நிலையில் இன்றைய ஏலத்தின்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்குவதற்கு சென்னை அணி கடுமையாக போட்டியிட்டது. அவருக்காக ரூ. 25 கோடி வரை தருவதற்கு சென்னை அணி முன் வந்த நிலையில் கூடுதலாக ரூ. 20 லட்சம் கொடுத்து கொல்கத்தா அணி கிரீனை வாங்கிச் சென்றது.
மேலும் நன்கு அறியப்பட்ட வீரர்களை வாங்குவதில் சென்னை அணியுடைய வியூகங்கள் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் Uncapped Player ஆன விக்கெட் கீப்பர் கார்த்தி ஷர்மாவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் கடும் போட்டியிட்டன. இதனால் அவருக்கான விலை அடிப்படை ஏலத்தொகையான ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடி வரை ஏலம் சென்றது.
ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்தி ஷர்மா விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடி பேட்டிங்கில் பெயர் பெற்றவர். ஏலம் ரூ.13 கோடியை எட்டிய போது கேகேஆர் விலகி நிலையில் சன்ரைசர்ஸ் ஏலம் கேட்டது. இதனால் ஏலம் மீண்டும் ஏறியது. இறுதியாக ரூ.14.20 கோடிக்கு சிஎஸ்கே எடுத்துள்ளது.
December 16, 2025 6:35 PM IST


