Last Updated:
சிஎஸ்கேவிடம் கையிருப்பில் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் உள்ளது. அந்த அணியால் அதிகபட்சம் 9 வீரர்களை வாங்க முடியும்.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் அபுதாபியில் இன்று நடைபெறுகிறது. மதியம் 2:30 மணியளவில் தொடங்க உள்ள இந்த ஏலம் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி கடந்த மாதம் 15ஆம் தேதி ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளராக இருந்த மதிஷா பத்திரனாவை விடுவிக்கப்பட்டார்.
இதேபோன்று ரவீந்திர ஜடேஜாவை டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியிடம் கொடுத்து அந்த அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியது. தற்போது சென்னை அணிக்கும் இன்னும் திறமையான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் நான்கு முக்கிய வீரர்களை சென்னை அணி குறி வைத்து வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சிஎஸ்கேவிடம் கையிருப்பில் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் உள்ளது. அந்த அணியால் அதிகபட்சம் 9 வீரர்களை வாங்க முடியும். இதேபோன்று அதிகபட்சமாக அந்த 9 வீரர்களில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேரை வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் RCB அணியால் விடுவிக்கப்பட்ட ஆல்ரவுண்டரான லியான் லிவிங்ஸ்டோன், சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய், மதிஷா பத்திரனா மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோர் மீது சென்னை அணி கவனம் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
December 16, 2025 1:06 PM IST


