Last Updated:
முதல் ரவுண்டில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை டெல்லி அணி ரூ. 2 கோடி அடிப்படை விலைக்கு வாங்கிச் சென்றது.
ஐபிஎல் மினி ஏலம் தற்போது விறுவிறுப்பாக அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு வீரரை வாங்குவதற்கு சென்னை அணி நிர்வாகம் ரூ. 25 கோடி வரை கொடுப்பதற்கு தயாரான நிலையில் அவரை ரூ. 25.20 கோடி கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.
மதியம் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த ஏலத்தினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களும், ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளம் ஆகியவை நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றன.
வீரர்களை விடுவித்த வகையில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ. 64 கோடியே 40 லட்ச ரூபாயும், சென்னை அணியிடம் ரூ. 43 கோடியே 40 லட்ச ரூபாயும் இருப்பில் இருந்தன.
முதல் ரவுண்டில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை டெல்லி அணி ரூ. 2 கோடி அடிப்படை விலைக்கு வாங்கிச் சென்றது. அதன் பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீனை வாங்குவதற்கு முதலில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ரூ. 13 கோடி வரை கடுமையான போட்டி நிலவியது.
அதன்பின்னர் போட்டியில் இணைந்த சென்னை அணி, கொல்கத்தா விதிக்கும் தொகைக்கு ரூ. 20 லட்சம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் ஏலத்தின்போது அதிக பரபரப்பு காணப்பட்ட நிலையில் ரூ. 25 கோடி வரைக்கும் கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முன் வந்தது.
ஐபிஎல் புதிய விதிகளின்படி ரூ. 18 கோடி மட்டுமே கேமரூன் கிரீன் பெற்றுக்கொள்வார். மீதம் உள்ள ரூ. 7.20 கோடி பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களின் நல நிதிக்கு வழங்கப்படும்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்கிற சாதனையை கேமரூன் கிரீன் ஏற்படுத்தியுள்ளார்.
December 16, 2025 3:29 PM IST


