Last Updated:
மதியம் 2:30 மணி அளவில் தொடங்கும் இந்த ஏலம் மாலை வரை அதிக விறுவிறுப்புடன் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் சில வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏலத்தில் 350 வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு 19 ஆவது எடிஷனாக நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குவிண்டன் டீ காக் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இவர்களில் கேமரூனை அணியில் எடுக்க ஒவ்வொரு ஐபிஎல் அணியும் அதிக ஆர்வம் காட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை அணிகள் கொடுத்து வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை அணி 9 வீரர்களை இந்த ஏலத்தில் எடுக்கும். அதனிடம் 43 கோடியே 40 லட்ச ரூபாய் கைவசம் உள்ளது. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஜேசன் ஹோல்டரும் அதிக விலைக்கு வாங்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
December 16, 2025 11:57 AM IST


