01
மிட்செல் ஸ்டார்க்: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இடதுகை வேக பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தின் போது 25 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெயர் ஸ்டார்க்கிற்கு கிடைத்தது. கடந்த சீசனில் தொடக்கத்தில் கொஞ்சம் சுமாராக விளையாடினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் குறிப்பாக இறுதிப் போட்டியில் ஸ்டார்க் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் விளையாடிய அவர் 17 விக்கெட்களை கைப்பற்றி அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்த முறை மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி விடுவித்துள்ளது. இவர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.


