• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : 115 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன்.. டெல்லிக்கு எதிரான மேட்ச்சில் 212 ரன்கள் சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : 115 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன்.. டெல்லிக்கு எதிரான மேட்ச்சில் 212 ரன்கள் சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 11, 2026 9:26 PM IST

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே மூன்று சதங்களை பதிவு செய்துள்ள சஞ்சு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்தார்.

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன்  அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினர். 18 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் 15 பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் – ஆயுஷ் மாத்ரே இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது.

பவர் ப்ளே ஓவர்களில் ஓரளவு சென்னை அணி ரன்கள் சேர்த்தாலும், அடுத்து வந்த ஓவர்களை நன்றாக பயன்படுத்தி ரன்கள் குவித்தது. 27 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைச்சதம் கடந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரேவும் அரைச்சதம் அடித்து அசத்தினார். மேலும் டெல்லி அணியினர் தங்களுக்கு கிடைத்த கேட்ச், ரன் அவுட் உள்ளிட்ட வாய்ப்புகளை அதிகம் தவற விட்டனர்.

52 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 102 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 14 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். ஐபிஎல் தொடரில் ஏற்கனவே மூன்று சதங்களை பதிவு செய்துள்ள சஞ்சு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்தார்.

36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த ஆயுஷ் மாத்ரே ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் களம் புகுந்த சிவம் துபே 10 பந்துகளில் 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் சென்னை அணி 212 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடவுள்ளனர்.

Read More

Previous Post

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல்: இருநாட்டு உறவுகளை பலப்படுத்த அபுதாபி சென்றடைந்த ஜெய்சங்கர்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

US – Iran War Update | ஈரான் பகிர்ந்த நெஞ்சை உலுக்கும் புகைப்படம்… தகிக்கும் அமெரிக்கா! அமைதிப் பேச்சுவார்த்தை என்ன ஆகும்? | உலகம் போட்டோகேலரி

Next Post
US – Iran War Update | ஈரான் பகிர்ந்த நெஞ்சை உலுக்கும் புகைப்படம்… தகிக்கும் அமெரிக்கா! அமைதிப் பேச்சுவார்த்தை என்ன ஆகும்? | உலகம் போட்டோகேலரி

US - Iran War Update | ஈரான் பகிர்ந்த நெஞ்சை உலுக்கும் புகைப்படம்... தகிக்கும் அமெரிக்கா! அமைதிப் பேச்சுவார்த்தை என்ன ஆகும்? | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin