Last Updated:
கடந்த ஆண்டு கேப்டன் ரிஷப் பன்ட் ஒரு ஆட்டத்தில் அவுட்டான போது, அவரிடம் மைதானத்தின் பால்கனியில் வைத்து சஞ்சீவ் கோயங்கா அதிருப்தியை வெளிப்படுத்தினார்
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்ததால், லக்னோ கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லக்னோவில் புதன்கிழமை நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இதனால், கடும் அதிருப்திக்குள்ளான லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, மைதானத்திலேயே வைத்து கேப்டன் ரிஷப் பன்ட் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல், கடந்த ஆண்டு கேப்டன் ரிஷப் பன்ட் ஒரு ஆட்டத்தில் அவுட்டான போது, அவரிடம் மைதானத்தின் பால்கனியில் வைத்து சஞ்சீவ் கோயங்கா அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், இரண்டு முறை ரிஷப் பன்ட் உடன் போட்டி முடிந்த உடன் விவாதம் செய்த வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது


