Last Updated:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை வாங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை விட்டுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து பதிரனாவையும் சிஎஸ்கே நிர்வாகம் விடுவித்துள்ளது.
ரவீந்திர ஜடேஜாவைத் தொடர்ந்து பதிரனா உள்ளிட்ட 11 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது.
19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அணி வீரர்களின் மாற்றங்கள் குறித்த பட்டியலை சனிக்கிழமை மாலைக்குள் சமர்ப்பிக்கும்படி கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் பரிமாற்றத்தில் அணி நிர்வாகங்கள் தீவிரம் காட்டின.
அந்த வகையில், சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் 18 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கியுள்ளது. இதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை 14 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தானுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இதன் மூலம் ஜடேஜா தனது முன்னாள் ஐபிஎல் அணிக்கு மீண்டும் திரும்புகிறார்.
இதேபோன்று சென்னை அணியின் மற்றொரு ஆல் ரவுண்டரான, சாம் கரனை ராஜஸ்தான் அணி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 11 ஐபிஎல் சீசன்களில் விளையாடியிருப்பதோடு அணியின் கேப்டனாகவும் சஞ்சு சாம்சன் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் பதிரனா உள்ளிட்ட 11 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. தீபக் ஹூடா, நகர்கோட்டி, ஆன்ட்ரே சித்தார்த், ராகுல் திரிபாதி, ஷேக் ஹசீத், விஜய் சங்கர், ரச்சின் ரவீந்திரா, சஞ்சு சாம்சன், ஜடேஜா, பதிரனா, கான்வே, வன்ஷ் பேடி ஆகிய 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் வீரர்களை தக்க வைப்பதற்கான கடைசி நாள் நாளை (நவ.16) என்பதால் வீரர்களை விடுவிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
November 15, 2025 5:38 PM IST


