Last Updated:
இவரும் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர். 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட இவர், மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்டவர்.
இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டுவான் ஜான்சன் என்ற வீரர் அணியில் சேர்க்கப்படுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியிருந்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.
இதற்கிடையே வங்கதேசத்தில் இந்துக்களுக்கு ஏற்பத்தப்பட்ட பிரச்னைகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே கொதிப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிசிசிஐ) அறிவுறுத்தலின் பேரில் கேகேஆர் அணி அவரை விடுவித்தது.
பிசிசிஐ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐபிஎல் தொடர்பான அனைத்து ஒளிபரப்புகள் மற்றும் விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வங்கதேச நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம் விவாதித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொல்கத்தா அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானின் மாற்று வீரராக யாரை அணியில் சேர்க்கலாம் என்ற விவாதத்தில், தென்னாப்பிரிக்க வீரர் டுவான் ஜான்சன் பெயர் கொல்கத்தா தரப்பிலிருந்து பிசிசிஐக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இவர் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் இரட்டைச் சகோதரர் ஆவார். முஸ்தபிசுர் ரஹ்மானைப் போலவே இவரும் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர். 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட இவர், மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்டவர்.


