Last Updated:
IPL 2026 | அருண் ஜெட்லீ மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பௌலிங் தேர்வு செய்ய மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது.
ஐபிஎல் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீழ்த்தியது.
2026 ஐபிஎல் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின. அருண் ஜெட்லீ மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பௌலிங் தேர்வு செய்ய மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது.
கடந்த போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி தேடித்தந்த ஓப்பனிங் ஜோடி ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா இந்த முறை கைகொடுக்கவில்லை. ரியான் ரிக்கல்டன் 9 ரன்களில் வெளியேறிய ஒரு பந்து இடைவெளியில் திலக் வர்மா அவுட் ஆனார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் விழுந்த அதிர்ச்சியில் இருந்த மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து மீட்டெடுத்தனர். 35 ரன்களில் ரோஹித் விக்கெட்டை இழக்க, சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின் வந்தவர்களில் பெரிதளவில் யாரும் சோபிக்காத நிலையில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ். 163 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு கேஎல் ராகுல் ஒரு ரன், நிதிஷ் ராணா பூஜ்ஜியம் எடுத்த முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட் பறிபோனது. அதிர்ச்சியில் உறைந்து போன டெல்லி அணியை கட்டமைக்க இளம் வீரர் சமீர் ரிஸ்வி மற்றும் பதுன் நிசாங்கா ஆகியோர் ஈடுபட்டனர்.
அதன்படி, இருவரும் பவுண்டரிகளை விளாசி ரன்களை சேர்த்தனர். பதுன் நிசாங்கா 44 ரன்கள் எடுத்து அவுட் ஆக, மறுபுறம் சமீர் ரிஸ்வி ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார். இறுதியில் 18.1 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து டெல்லி அணி வென்றது. இதில், சமீர் ரிஸ்வி 90 ரன்கள் எடுத்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


