• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : முதல் மேட்ச்சில் சென்னை அணி படுதோல்வி.. அடித்து நொறுக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : முதல் மேட்ச்சில் சென்னை அணி படுதோல்வி.. அடித்து நொறுக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்… | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 30, 2026 11:25 PM IST

குறைவான ஸ்கோர், அதிக விக்கெட், பந்துகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் சென்னையின் நெட் ரன்ரேட் -4.171 ஆக உள்ளது.

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக அமைந்தனர். சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் பவர் பிளே முடிவதற்குள்ளேயே முக்கியமான விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி தடுமாறியது.

ஆயுஷ் மாத்ரே ரன் ஏதும் எடுக்காமலும், மேத்யூ ஷார்ட் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்த நிலையில், மிடில் ஆர்டரில் வந்த சர்ஃபராஸ் கான் 17 ரன்களும், சிவம் துபே 6 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் ஒரு கட்டத்தில் சென்னை அணி 57 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மிகக் குறைந்த ஸ்கோரில் சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கீழ் வரிசையில் விளையாடிய ஜேமி ஓவர்டன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 100-ஐத் தாண்ட உதவினார். கார்த்திக் சர்மா தன் பங்கிற்கு 15 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் அன்ஷுல் காம்போஜ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, சிஎஸ்கே அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 17 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் சூர்யவன்ஷி 52 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 38 ரன்களும், துருவ் ஜுரெல் 18 ரன்களும், ரியான் பராக் 14 ரன்களும் சேர்க்க 12.1 ஓவரில் ராஜஸ்தான் அணி 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேலும் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை அணி கடைசி இடமான 10 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

First Published :

Mar 30, 2026 11:23 PM IST

Read More

Previous Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் இராஜினாமா

Next Post

தங்கத்தை விட மவுசு… 12 டன் கிட்கேட் சாக்லேட்கள் மாயம்… ஐரோப்பாவை உலுக்கிய கொள்ளை

Next Post
தங்கத்தை விட மவுசு…  12 டன் கிட்கேட் சாக்லேட்கள் மாயம்… ஐரோப்பாவை உலுக்கிய கொள்ளை

தங்கத்தை விட மவுசு... 12 டன் கிட்கேட் சாக்லேட்கள் மாயம்... ஐரோப்பாவை உலுக்கிய கொள்ளை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin