பஞ்சாப் கிங்ஸ் அணியை பொருத்தளவில் பின்வரும் வீரர்கள் தக்க வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஷ்ரேயாஸ் ஐயர்: கடந்த சீசனில் அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரர் இவர் (604 ரன்கள்). இவரது பேட்டிங் PBKS-க்கு முக்கிய பலமாக கருதப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங்: அனுபவம் வாய்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் அணியின் முன்னணி வேகப்பந்து விக்கெட் வீழ்த்தியவர்.
யுஸ்வேந்திர சாஹல்: நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் மற்றும் அணியின் முன்னணி சுழற்பந்து விக்கெட் வீழ்த்தியவர்.
சஷாங்க் சிங்: கடைசி நேரத்தில் ஆட்டத்தை முடிக்கும் (Finishing) அவரது அற்புதமான திறனால் அணிக்கு மிக முக்கியமானவராகத் திகழ்ந்தார்.
இந்த 4 வீரர்கள் தக்க வைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதேபோன்று இளம் வீரர்களான பிரப் சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா ஆகியோரையும் தக்க வைத்துக் கொள்ள அணி நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.
அதேநேரம் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களை விடுவித்து குறைந்த விலைக்கு பஞ்சாப் அணி மினி ஏலத்தில் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், நேஹல் வதேரா, சஷாங்க் சிங், விஜய் குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், ஹர்ப்ரீத் ப்ரார், விஷ்ணு வினோத், மார்கோ ஜேன்சன், ஜோஷ் இங்லிஸ், சேவியர் பார்ட்லெட், குல்தீப் சென், பய்லா அவினாஷ், சூர்யான்ஷ் ஷெட்கே, பிரியன்ஷ் ஆர்யா, பிரவீன் டூபே, அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் லாக்கி பெர்குசன்.
November 12, 2025 9:19 PM IST

