ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது.
இந்த தொடரில் சென்னை அணி முன்பு விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் கம் பேக் கொடுப்பதற்கு சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது.
பஞ்சாப் அணியை பொருத்தவரை அந்த அணி ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து சென்னை அணி வீரர்கள் பேட்டிங் செய்யவுள்ளனர். இரு அணிகளும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்றைய மேட்ச்சில் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு-
சென்னை அணியின் ப்ளேயிங் 11 வீரர்கள்-
சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், மாட் ஹென்றி, கலீல் அகமது
பஞ்சாப் கிங்ஸ் –
பிரப்சிம்ரன் சிங்(விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனாலி, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

