Last Updated:
தற்போது ஐபிஎல் மினி ஏலத்தில் என்ன மாதிரியான வீரர்களை வாங்கலாம் என்ற வியூகங்களை ஐபிஎல் அணிகள் வகுத்து வருகின்றன
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது.
இத்தொடருக்கு முன்பாக டிரேடிங் முறையில் அணிகள் சில முக்கிய வீரர்களை மாற்றம் செய்தன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். அதற்கு பதிலாக சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்றுள்ளார்.
சென்னை அணியில் இணைந்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு அடுத்து வரும் சீசன்களில் கேப்டன்ஷிப் பொறுப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
2026 ஐபிஎல் சீசனுடன் தோனி விடை பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், தோனியை போன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து மேலும் சில வீரர்கள் ஓய்வு பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த ஆண்டிலிருந்து ஓய்வு பெறலாம் என பரவலாக தகவல் வெளிவர தொடங்கி உள்ளன.
இதேபோன்று 37 வயதாகும் அஜிங்கியா ரகானே எதிர்பார்த்த ஆட்டத்தை கொல்கத்தா அணியில் வெளிப்படுத்தாமல் இருந்தார். அதனால் அவரும் ஓய்வை அறிவிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
November 23, 2025 7:19 PM IST


