Last Updated:
ராஜாதான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் டிரேட் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜாதான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் டிரேட் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் எந்தெந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், அந்த அணியிலிருந்து வெளியேற விரும்புவதாக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.
ராஜஸ்தான் அணிக்கும் – சஞ்சு சாம்சனுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்பட்டது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வர்த்தகம் மூலம் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சஞ்சு சாம்சன் டிரேட் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சு சாம்சனை பொறுத்தவரை, 2013-ம் ஆண்டு கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். அந்த அணிக்காக இதுவரை 149 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். 2 சதமடித்திருக்கிறார். 26 அரை சதங்கள் என மொத்தம் 4,219 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
November 01, 2025 7:37 PM IST


