Last Updated:
IPL 2026 | ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு, தகுந்த மருத்துவக் காரணங்கள் இன்றி விலகும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் விளையாட தடை விதிக்கப்படலாம் என்பது விதி.
டெல்லி அணியால் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் (Ben Duckett) ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19 ஆவது சீசன் வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகி வருகின்றனர். ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், நேத்தன் எல்லிஸ் ஆகியோர் விலகினர். தற்போது அந்த பட்டியலில் பென் டக்கெட்டும் சேர்ந்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பென் டக்கெட் அறிவித்துள்ளார். இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்த இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார். ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு, தகுந்த மருத்துவக் காரணங்கள் இன்றி விலகும் வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் விளையாட தடை விதிக்கப்படலாம் என்பது விதி.
இதனால் வரும் 2027 மற்றும் 2028 சீசன்களில் பென் டக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பென் டக்கெட் விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரரை டெல்லி அணி நிர்வாகம் தீவிரமாகத் தேடி வருகிறது.
இதற்கிடையே, காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நாதன் எல்லிஸுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஸ்பென்சர் ஜான்சன் மாற்று வீரராக இணைந்துள்ளார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸுக்கு ஏற்கனவே இருந்த தொடை தசைநார் காயம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய கூடுதல் காலம் தேவைப்படுவதால் விளையாடுவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸ் விலகியுள்ளார். இந்த நிலையில், அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸில் ஸ்பென்சர் ஜான்சன் மாற்று வீரராக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக, ஸ்பென்சர் ஜான்சன், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சனை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் ‘டெத் ஓவர்களில்’ மிகவும் துல்லியமாகப் பந்து வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


