• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ஆர்.சி.பி.க்கு எதிரான மேட்ச்சில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 5, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ஆர்.சி.பி.க்கு எதிரான மேட்ச்சில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 05, 2026 11:29 PM IST

தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 9 ரன்களும், கேப்டன் ருதுராஜ் 7 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 1 ரன்னும் எடுத்து வெளியேறினர்

News18
News18

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக இன்று தனது 3 ஆவது போட்டியில் விளையாடிய சென்னை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஏற்கனவே இந்த தொடரில் சென்னை அணி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சென்னை அணியின் அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி இறைத்தனர்.

20 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆர்சிபி அணி 250 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணியில் பிலிப் சால்ட் 46 ரன்களும், விராட் கோலி 18 ரன்களும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களும் எடுத்தனர்.

கேப்டன் ரஜத் பட்டிதார் 48 ரன்கள் சேர்க்க டிம் டேவிட் வெறும் 25 பந்துகளில் அதிரடியாக 70 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து சென்னை அணி 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 9 ரன்களும், கேப்டன் ருதுராஜ் 7 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். சர்பராஸ் கான் 25 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார்.

பிரசாந்த் வீர் 43 ரன்களும், ஜேமி ஓவர்டன் 37 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 207 ரன்கள் எடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

First Published :

Apr 05, 2026 11:29 PM IST

Read More

Previous Post

பாப்பரசரிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வெளிக்கிளம்பிய கடும் கண்டனம்

Next Post

சிகாமட் விபத்தில் மூவர் உயிரிழந்தற்கு காரணமான ஓட்டுநருக்கு மெத்தம்பெத்தமைன் போதைப்பொருள் தொற்று உறுதி | Makkal Osai

Next Post
சிகாமட் விபத்தில் மூவர் உயிரிழந்தற்கு காரணமான ஓட்டுநருக்கு மெத்தம்பெத்தமைன் போதைப்பொருள் தொற்று உறுதி | Makkal Osai

சிகாமட் விபத்தில் மூவர் உயிரிழந்தற்கு காரணமான ஓட்டுநருக்கு மெத்தம்பெத்தமைன் போதைப்பொருள் தொற்று உறுதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin