19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் மொத்தமுள்ள 10 அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடுகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 13 மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.


