Last Updated:
பவுலிங்கை பொருத்தளவில் ஓவர்டன், நூர் அகமது, குர்ஜப்னீத் சிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த 2 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைக்கு ஹாட்ரிக் வெற்றியை சென்னை பதிவு செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
போட்டி உள்ளூரில் நடைபெறுவதால் ஐதராபாத் அணிக்கு அதிக சப்போர்ட் இருக்கும். சென்னை அணியின் ப்ளேயிங் 11 இல் சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், ஜேமி ஓவர்டன், மேத்யூ ஷார்ட், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அதிகமான இலக்கையும் சென்னை அணி சேஸ் செய்யும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். சென்னை அணியில் தோனி இணைந்துள்ள போதிலும், அவர் இன்றைக்கு விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பவுலிங்கை பொருத்தளவில் ஓவர்டன், நூர் அகமது, குர்ஜப்னீத் சிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத் அணியின் ப்ளேயிங் 11 : அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவாங் குமார், பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன், எஷான் மலிங்கா


