Last Updated:
மிடில் ஆர்டரில் சிவம் துபே தனது வழக்கமான அதிரடியைத் தொடர்ந்தார். அவர் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்
பஞ்சாப் அணிக்கு எதிரான மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது.
ஆரம்பத்தில் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், அதன்பின்னர் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அபாரமாக விளையாடியது. குறிப்பாக ஆயுஷ் மாத்ரே வெறும் 43 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். கேப்டன் ருதுராஜ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிடில் ஆர்டரில் சிவம் துபே தனது வழக்கமான அதிரடியைத் தொடர்ந்தார். அவர் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் சர்பராஸ் கான் மின்னல் வேகத்தில் விளையாடி 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்து ரன் ரேட்டை உயர்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 209 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
Apr 03, 2026 10:07 PM IST


