இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர். இரு அணிகளும் இதுவரை கோப்பையை வெல்லாத நிலையில், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அகமதாபாத் மைதானத்தைப் பொறுத்த அளவில் தற்போதைக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் ரசிகர்கள் இந்தப் போட்டியை முழுமையாகக் கண்டு களிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மும்பைக்கு எதிரான குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 204 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்தது. அந்த வகையில் இன்றைய போட்டியிலும் சேசிங்கை தேர்வு செய்திருப்பதால் பஞ்சாப் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பஞ்சாப் அணி குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களம் இறங்க உள்ளது. ஆர்சிபி அணியில் இன்று விளையாடும் வீரர்கள்..
பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இன்று விளையாடும் வீரர்கள்..
பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
June 03, 2025 7:15 PM IST

