Last Updated:
குஜராத் அணி தனது இரண்டாவது போட்டியில், வரும் சனிக்கிழமை அன்று மும்பை அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.
கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்து, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், குஜராத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 243 ரன்கள் குவித்தது. இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, 232 ரன்கள் மட்டுமே எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில், இந்திய அணியிலேயே விளையாடிய வாஷிங்டன் சுந்தர் இடம் பெறவில்லை. இதனால் அனைத்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். மேலும், சில விமர்சகர்கள் சுப்மான் கில் கேப்டன்ஷிப் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், அவர் கேப்டன் பொறுப்புக்கு இன்னும் தயாராகவில்லை என்றும் கூறியிருந்தனர்.
சிறந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் குஜராத் அணியில் பிளேயிங் லெவனில் இடம் பெறாதது கடும் விமர்சனங்களை கிளப்பி வருகிறது. இது குறித்து எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதில், புஷ்கர் என்பவர், “இந்திய அணியிலேயே ஆடும் லெவனில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். ஆனால், ஐபிஎல் தொடரில் ஆடும் லெவனில் ஏன் இல்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
I have been wondering this too:)
— Sundar Pichai (@sundarpichai) March 25, 2025
இந்தப் பதிவுக்கு கமெண்ட் செய்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, “எனக்கும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இல்லாதது ஆச்சரியம் அளித்தது” என்று பதிவிட்டிருந்தார். பெரும்பாலும் சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதோ அல்லது பதில் கூறுவதோ கிடையாது.
ஆனால், வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவாக அவர் பதிவிட்டுள்ளது லைக்ஸ்களை குவித்து வருகிறது. குஜராத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், அந்த அணி மீது நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. குஜராத் அணி தனது இரண்டாவது போட்டியில், வரும் சனிக்கிழமை அன்று மும்பை அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.
March 27, 2025 10:12 PM IST


