Last Updated:
பரத் அருண் இந்திய அணிக்காக 1986-87-களில் 4 ஒருநாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பரத் அருண் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து விலகிய நிலையில், அவரை லக்னோ அணி தன்னுடைய பவுலிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. பரத் அருணின் ஆலோசனையின் கீழ் கொல்கத்தா அணி ஏராளமான வெற்றிகளைக் குவித்துள்ளது.
அவர் அந்த அணியின் பௌலிங் பயிற்சியாளராக 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் தற்போது லக்னோ அணியில் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியில் மேலும் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த பரத் அருண், “தொழில்முறை ரீதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சிறப்பாக செயல்படுகிறது. தொலைநோக்கு பார்வையுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனித்துவத்தை வெளிப்படுத்தும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இணைவதை கௌரவமாக எண்ணுகிறேன்” என பரத் அருண் தெரிவித்துள்ளார்.
July 31, 2025 3:31 PM IST