• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ரோஹித் சர்மா அரைசதம்.. ஐதராபாத்தை எளிதாக வென்றது மும்பை இந்தியன்ஸ்

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ரோஹித் சர்மா அரைசதம்.. ஐதராபாத்தை எளிதாக வென்றது மும்பை இந்தியன்ஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 23, 2025 10:55 PM IST

46 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 3 சிக்சர் 8 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்தார். 3 ஆவது விக்கெட்டிற்கு ரோஹித் – சூர்யகுமார் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ரோஹித் சர்மாரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 41 ஆவது லீக் போட்டியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், அபிஷேக் சர்மா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இவ்விரு விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட் கைப்பற்றினார். இஷான் கிஷன் 1 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 2 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் ஐதராபாத் அணி 4.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

அடுத்து வந்த அனிகேட் வர்மா 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் இணைந்த ஹெய்ன்ரிக் கிளாசன் – அபினவ் மனோகர் இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கிளாசன் 44 பந்துகளில் 2 சிக்சர் 9 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபினவ் மனோகர் 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை தரப்பில் ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க வீரர் ரிக்கெல்டன் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வில் ஜாக்ஸ் 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் – ரோஹித் சர்மா இணை அதிரடியாக ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தியது.

46 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 3 சிக்சர் 8 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்தார். 3 ஆவது விக்கெட்டிற்கு ரோஹித்  – சூர்யகுமார் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதையும் படிங்க – தோனி குறித்து பல ஆண்டுகளாக உண்மை என நம்பப்பட்ட தகவல்.. வதந்தி என தெரியவந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி

15.4 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 9 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளைப் பெற்றுள்ள மும்பை அணி தரவரிசையில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

First Published :

April 23, 2025 10:55 PM IST

Read More

Previous Post

9 மனைவிகளுக்கு டார்ச்சர்… 10 ஆவது மனைவியை அடித்தே கொன்று தீ வைத்து எரித்த நபர் – அதிர்ச்சி சம்பவம்

Next Post

'சீனாவின் பொருளாதாரத்தை விரைவில் முந்துவோம்' –  பிரபல தொழிலதிபர்!

Next Post
'சீனாவின் பொருளாதாரத்தை விரைவில் முந்துவோம்' –  பிரபல தொழிலதிபர்!

'சீனாவின் பொருளாதாரத்தை விரைவில் முந்துவோம்' -  பிரபல தொழிலதிபர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin