Last Updated:
படிக்கல் 40 ரன்களும், விராட் கோலி 62 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கேப்டன் சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். சாம்சன் ஒருநாள் போட்டியை போன்று விளையாட மறுமுனையில் ஜெய்ஸ்வால் பவுண்டரிகள் விளாசி ரன்கள் குவித்தார்.
19 பந்துகளை சந்தித்த சாம்சன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். 6.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணி பவர் ப்ளேயில் ரன்கள் குவிக்க தவறியதால், ரன் குவிப்பு வேகம் குறைந்தது.
பின்னர் இணைந்த பராக் – ஜெய்ஸ்வால் இணை ஆர்சிபி பவுலிங்கை சமாளித்து விளையாடியது. பராக் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி ஓவர்களில் துருவ் ஜுரெல் 23 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் 30 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி 17.3 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆர்சிபி அணியின் பிலிப் சால்ட் 33 பந்துகளில் 6 சிக்சர் 3 பவுண்டரியுடன் 65 ரன்கள் அதிரடியாக சேர்த்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். 92 ரன்களில் ஆர்சிபி தனது முதல் விக்கெட்டை இழந்தது. பின்னர் இணைந்த தேவ்தத் படிக்கல் – விராட் கோலி இணை நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது.
படிக்கல் 40 ரன்களும், விராட் கோலி 62 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலமாக தர வரிசை பட்டியலில் ஆர்சிபி அணி 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
April 13, 2025 7:09 PM IST
IPL 2025 : ராஜஸ்தானை 9 விக். வித்தியாசத்தில் வென்ற ஆர்.சி.பி. – பாயின்ட்ஸ் டேபிளில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது


