• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ‘யுவராஜ் சிங் – பிரைன் லாரா சேர்ந்த கலவை’ – 14 வயது வீரர் சூர்யவன்ஷிக்கு குவியும் பாராட்டு

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ‘யுவராஜ் சிங் – பிரைன் லாரா சேர்ந்த கலவை’ – 14 வயது வீரர் சூர்யவன்ஷிக்கு குவியும் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 20, 2025 6:28 PM IST

அறிமுக போட்டியில் இந்த ஸ்கோர் மிகவும் சிறப்பான ஒன்று என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வைபவ் சூர்யவன்ஷிவைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியுள்ள வைபவ் சூர்யவன்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்சி அறிமுகமானார்.

தனது முதல் போட்டியில் முதல் பந்திலையே அவர் சிக்ஸரை விளாசினார். அதுவும் அனுபவமிக்க ஷர்துல் தாகூர் பந்தில் இவர் சிக்சர் அடித்தது பாராட்டுகளை குவித்து வருகிறது. 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அறிமுக போட்டியில் இந்த ஸ்கோர் மிகவும் சிறப்பான ஒன்று என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். சூர்யவன்சி ஆடும் விதம் குறித்து நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இவர் யுவராஜ் சிங்கை போன்று பேட்டை சுழற்றுவதாகவும் பிரையன் லாரா போன்று மிக வேகமாக பந்தை அடிப்பதாகவும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் சூர்யவன்சியின் பயிற்சியாளர் மணிஷ் ஓஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ”சூர்யவன்சிக்கு பீட்சா சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் கிரிக்கெட்டிற்காக அவர் அதனை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினேன். அவரும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்தார். இப்போது அவர் மட்டன் சாப்பிட மாட்டார்.

முன்பு நாங்கள் மட்டன் எவ்வளவு கொடுத்தாலும் அதை முழுமையாக சாப்பிட்டு விடுவார். அதனால் தான் அவர் சற்று குண்டான தோற்றத்தில் இருக்கிறார். அவருக்கு கிரிக்கெட் வாழ்வில் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. அவரால் மிகப் பெரிய போட்டிகளை வெல்ல முடியும் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன்.

பேட்டிங் செய்யும்போது அவர் பயப்படவே மாட்டார். அவர் பிரையன் லாராவும் யுவராஜ் சிங்கும் கலந்த கலவை. அறிமுக போட்டியில் அவர் சிறப்பான முறையில் விளையாடியது திருப்தி அளிக்கிறது. அவர் விளையாடுவதற்கு முன்பாக ராகுல் டிராவிட்டும், ராஜஸ்தான் அணி நிர்வாகமும் எனக்கு ஃபோனில் தகவல் சொன்னார்கள்.

இதையும் படிங்க – IPL 2025 : 10-ஆவது இடத்திலிருக்கும் சென்னை அணி.. ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?

அதைக் கேட்டபோது எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும் பதட்டமும் காணப்பட்டது. நான் சூர்யவன்சியிடம், “அமைதியாக இரு பதட்டப்படாதே. எப்போதும் விளையாடுவாயே அதே போன்று விளையாடு” என்று சொன்னேன். பந்து சரியாக கிடைத்தால் சிக்சர் அடிக்க தயங்காதே என்று கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.

First Published :

April 20, 2025 6:28 PM IST

Read More

Previous Post

துரை வைகோ-மல்லை சத்யா இடையே சமாதானம்!மனம் விட்டு பேசி கட்டி அணைத்துக் கொண்டனர்!’ வைகோ பேட்டி!

Next Post

10G Internet: ‘இது லிஸ்ட்லயே இல்லையே’.. 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா..!

Next Post
10G Internet: ‘இது லிஸ்ட்லயே இல்லையே’.. 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா..!

10G Internet: 'இது லிஸ்ட்லயே இல்லையே'.. 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin