Last Updated:
எங்கள் அணியில் என்னுடன் பும்ரா, ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ் என மூன்று கேப்டன்கள் இருக்கிறார்கள். – ஹர்திக் பாண்ட்யா
சென்னை அணிக்கு எதிராக வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வரும் சனிக்கிழமை அன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. இதையொட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் துவக்க விழாவில் இந்திய திரையுலகினர் உட்பட ஏராளமான விஐபிகள் கலந்து கொள்கிறார்கள்.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
இதற்கான டிக்கெட்டுகள் இன்று தொடங்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் மெதுவாக பந்துவீசி அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது.
இதற்காக ஹர்திக் பாண்டியாவிற்கு நடப்பு சீசனில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார்.
அவர் இல்லாத சூழலில் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க – பதிரானா பந்தில் ஹெலிகாப்டர் ஷாட்..! லைக்குகளை அள்ளும் தோனியின் பயிற்சி வீடியோ
இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டு பேசிய ஹர்திக் பாண்டியா, ”நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். ஏனென்றால் எங்கள் அணியில் என்னுடன் பும்ரா, ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ் என மூன்று கேப்டன்கள் இருக்கிறார்கள். எனக்கு உதவி தேவைப்பட்டால் அவர்கள் எப்போதும் ஆலோசனை வழங்குவார்கள்” என்று கூறினார்.
March 19, 2025 7:52 PM IST


