• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : மும்பை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? லக்னோவுடன் இன்று மோதல்

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : மும்பை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? லக்னோவுடன் இன்று மோதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 27, 2025 2:48 PM IST

ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டு பேட்டிங்கில் மோசமாக விளையாடுவதால் ரிஷப் பந்த்திற்கே மனதளவில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

News18News18
News18

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சொந்த மைதானமான வான்கிடேவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை அணி.

முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மும்பை அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் நடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று மும்பை அணி 10 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணி சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக், சூர்யகுமார் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் கடந்த சில போட்டிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் 4-6 ஓவர்களில் மும்பை எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விடுகிறது. மீதம் உள்ள 5 போட்டிகளில் மும்பை 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்று உறுதி செய்யும்.

இந்நிலையில் சொந்த மைதானமான  வான்கிடேவில் நடைபெறும் போட்டியில் மும்பை அணி லக்னோவை எதிர்கொள்கிறது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய லக்னோ, தற்போது வெற்றி தோல்விகளை மாறி மாறி எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக  அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துடைய பேட்டிங் ஃபார்ம் அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ அணியில் ரிஷப் பந்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் ஓரளவு திறமையாக  விளையாடி வெற்றியை உறுதி செய்கின்றனர். ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டு பேட்டிங்கில் மோசமாக விளையாடுவதால் ரிஷப் பந்த்திற்கே மனதளவில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க – CSK | “சரியான வீரர்களை தேர்வு செய்யவில்லை…” – ஸ்டீபன் ஃபிளமிங் ஓபன் டாக்

இந்த சூழலில் ரிஷப் இன்று கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த ஆட்டம் மாலை 3.30 மணியளவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் 3 ஆம் இடத்திற்கும், லக்னோ வெற்றி பெற்றால் 4 ஆம் இடத்திற்கும் நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னேறும்.

First Published :

April 27, 2025 2:48 PM IST

Read More

Previous Post

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘ஒரே நாளில் ரூ.520 குறைந்த தங்கம்’ ஏப்ரல் 28, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

சிறந்த ஊழியர்களுக்கு கார், பைக் வழங்கி ஊக்கம் தந்த சென்னை ஐடி நிறுவனம்! | Chennai IT company motivates its employees by giving car and bikes

Next Post
சிறந்த ஊழியர்களுக்கு கார், பைக் வழங்கி ஊக்கம் தந்த சென்னை ஐடி நிறுவனம்! | Chennai IT company motivates its employees by giving car and bikes

சிறந்த ஊழியர்களுக்கு கார், பைக் வழங்கி ஊக்கம் தந்த சென்னை ஐடி நிறுவனம்! | Chennai IT company motivates its employees by giving car and bikes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin