Last Updated:
இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெறுவது ஆட்டத்தில் முக்கிய விளைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹைதராபாத் அணி, ராஜஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் இஷான் கிஷனின் அதிரடி சதத்தால் 286 ரன்கள் குவித்தது. பதிலுக்கு ராஜஸ்தான் அணியும் அதிரடியாக விளையாடினாலும், 44 ரன்களில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டி நடைபெற்ற அதே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில்தான் இன்று லக்னோவை எதிர்கொள்கிறது ஹைதராபாத். பேட்ஸ்மேன்களுக்கு சாதமான இந்த ஆடுகளத்தில், இன்றும் ரன்வேட்டை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹைதராபாத் அதிரடி வீரர்கள் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரின் ஆக்ரோஷமான ஆட்டத்தால், அந்த அணி 300 ரன்களை குவிக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ள, பந்த் தலைமையிலான லக்னோ அணி, ஹைதராபாத் அணிக்கு முட்டுக்கட்டை போட்டு முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர் போன்ற அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் ரிஷப் பந்தின் மோசமான கேப்டன்ஷிப் காரணமாக லக்னோ தோல்வி அடைந்தது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மிக எளிதான ஸ்டம்பிங்கை ரிசப் பந்த் தவறவிட்டார். இது ஆட்டத்தின் ரிசல்ட்டை மாற்றியது. இந்த நிலையில் முதல் வெற்றியை பெரும் முனைப்பில் லக்னோ அணி இன்று களம் இறங்குகிறது.
இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெறுவது ஆட்டத்தில் முக்கிய விளைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
March 27, 2025 5:31 PM IST


