ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணியும், ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் சமபலம் வாய்ந்த அணிகளாக கருதப்படுகிறது. இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளில் பெங்களூரு தோல்வியை சந்திக்கவில்லை. குஜராத் அணி ஒன்றில் தோல்வியும், ஒன்றில் வெற்றியும் பெற்றுள்ளது.
விராட் கோலி, டிம் டேவிட், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோர் பெங்களூரு அணிக்கு வலு சேர்க்கின்றனர். குஜராத் அணியில் ரஷித் கான், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் பந்துவீச்சில் அசத்துகின்றனர்.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு அணி, அதை தக்கவைக்கவும், 4ஆம் இடத்தில் உள்ள குஜராத் அணி வென்று புள்ளி பட்டியலில் முன்னேற தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு 7.30மணிக்கு இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
ஆர்.சி.பி அணியில் எதிர்பார்க்கப்படும் ப்ளேயிங் 11 –
விராட் கோலி, பிலிப் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
இதையும் படிங்க – பிசிசிஐ-யின் ஊதிய ஒப்பந்தம்.. ஸ்ரேயஸ் ஐயருக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்..
குஜராத் அணியில் எதிர்பார்க்கப்படும் ப்ளேயிங் 11 –
ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
April 02, 2025 3:23 PM IST