Last Updated:
எந்தமாதிரியான போதைப் பொருளை பயன்படுத்தினார், அவர் எவ்வளவு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் போதைப் பொருள் பயன்படுத்தியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன் அணிக்காக விளையாடிய ரபாடா கடந்த மாதம் 3 ஆம் தேதி திடீரென, தென் ஆப்ரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
சொந்த காரணங்களுக்காக அவர் சென்றதாக கூறப்பட்ட நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் கிரிக்கெட்டிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதை ரபாடாவே உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற எஸ்.ஏ.20 போட்டியின் போது உற்சாகம் தரும் போதைப் பொருளை எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். ரபாடா வெளியிட்டுள்ள அறிக்கையில் ரசிகர்களை ஏமாற்றியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், விரைவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார் .
ரபாடா எந்தமாதிரியான போதைப் பொருளை பயன்படுத்தினார், அவர் எவ்வளவு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ககிசோ ராபாடா
இதனால் அவர் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, அடுத்த மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அணியில் ரபாடா இல்லாத நிலையிலும் குஜராத் டைட்டன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ளது.


