Last Updated:
மும்பை அணி தரப்பில் பும்ரா மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லிக்கு எதிராக வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் அக்சர் படேல் விளையாடவில்லை. கேப்டன்ஷிப் பொறுப்பை ஃபாஃப் டூப்ளசிஸ் ஏற்றுக் கொண்டார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து மும்பை அணி தடுமாறியது. ரியான் ரிக்கெல்டன் 25 ரன்களும், ரோஹித் சர்மா 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வில் ஜாக்ஸ் 21 ரன்களும், திலக் வர்மா வர்மா 27 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 4 சிக்சர் 7 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.
நமன் திர் 8 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் 24 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 180 ரன்கள் குவித்தது. இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் 11 ரன்னும், டூப்ளசிஸ், அபிஷேக் போரெல் தலா 6 ரன்களும் எடுத்த ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களில் வெளியேறினார்.
அசுதோஷ் சர்மா 18 ரன்களும், விப்ராஜ் நிகாம் 20 ரன்களும், சமிர் ரிஸ்வி 39 ரன்களும் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
May 21, 2025 11:44 PM IST


