Last Updated:
பஞ்சாப் அணி டெல்லியை வீழ்த்தி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு. டெல்லி அணி வெற்றி பெற முயற்சி. 66 ஆவது லீக் போட்டி பரபரப்பாக இருக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத், பஞ்சாப், பெங்களூரு, மும்பை ஆகிய நான்கு அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இந்நிலையில், ஜெய்ப்பூரில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 66 ஆவது லீக் போட்டியில் டெல்லி அணி வலிமையான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, ஒரு டிரா என 17 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அணி 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, ஒரு டிரா என 13 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்துள்ளது.
பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேற முடியும் என்பதால் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராட உள்ளது. அதேநேரம் தோல்வியால் துவண்டு போயுள்ள டெல்லி அணி, பஞ்சாப்பை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்யும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


