• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஜிதேஷ் சர்மா அபார பேட்டிங்.. லக்னோவை வென்று குவாலிபையர் 1 சுற்றுக்கு தகுதி பெற்றது ஆர்சிபி..

GenevaTimes by GenevaTimes
May 27, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஜிதேஷ் சர்மா அபார பேட்டிங்.. லக்னோவை வென்று குவாலிபையர் 1 சுற்றுக்கு தகுதி பெற்றது ஆர்சிபி..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2025 12:07 AM IST

நாளை மறுதினம் நடைபெறும் குவாலிபையர் 1 போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ஜிதேஷ் சர்மா - மயங்க் அகர்வால்ஜிதேஷ் சர்மா - மயங்க் அகர்வால்
ஜிதேஷ் சர்மா – மயங்க் அகர்வால்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் ப்ரீஸ்க் ஆகியோர் களம் இறங்கினர்.

ப்ரீஸ்க் 12 பந்துகளில் 1 சிக்சர் பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ரிஷப் பந்த் – மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சதம் அடித்த லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கம்பேக் கொடுத்து லக்னோ ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர் 11 பவுண்டரியுடன் 118 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 227 ரன்கள் குவித்தது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

தொடக்க வீரர் பிலிப் சால்ட் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ரஜத் பட்டிதார் 14 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டோன் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

நட்சத்திர வீரர் விராட் கோலி 30 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 11.2 ஓவர்களில் அணி 4 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது இணைந்த கேப்டன் ஜிதேஷ் சர்மாவும், மயங்க் அகர்வாலும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். மயங்க் அகர்வால் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். 33 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் ஜிதேஷ் சர்மா 6 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 85 ரன்கள் சேர்க்க 18.4 ஓவர்களில் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் குவாலிபையர் 1 போட்டிக்கு ஆர்சிபி தகுதி பெற்றுள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் குவாலிபையர் 1 போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

First Published :

May 27, 2025 11:56 PM IST

Read More

Previous Post

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமான தரவுகள் இல்லை!

Next Post

போதைப் பொருட்களுடன் வந்த பல நாள் மீன்பிடி படகுகள்

Next Post
போதைப் பொருட்களுடன் வந்த பல நாள் மீன்பிடி படகுகள்

போதைப் பொருட்களுடன் வந்த பல நாள் மீன்பிடி படகுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin