Last Updated:
தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூழலில் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ள நிலையில் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை அணி நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி கடந்த 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூழலில் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த அறிவிப்பு சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி பொறுப்பேற்றதற்கு பின்னர் முதல் போட்டியாக நாளை கொல்கத்தா அணியை சென்னை எதிர்கொள்கிறது.
தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணி 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 இல் நடைபெற்ற போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2022 ஆம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக ரவிந்திர ஜடேஜா மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த மாற்றம் அணிக்கு பலன் தராத நிலையில், தொடரின் பாதியிலேயே கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர் கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கடந்த சீசனில் சென்னை அணி 14 லீக் போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 5 ஆம் இடத்தை பிடித்தது. நடப்பு சீசனில் சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 9 ஆம் இடத்தில் உள்ளது.
ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறினாலும், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு தோனியை தவிர்த்து அணியில் எந்த வீரரும் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
April 10, 2025 6:18 PM IST


