Last Updated:
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்றி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் சென்னை அணிக்க இது 10 ஆவது தோல்வி என்பது கவனிக்கத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவோன் கான்வே களம் இறங்கினர்.
2 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் டெவோன் கான்வே 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த உர்வில் படேல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் 13 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 1 ரன்னும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் இணைந்த ஆயுஷ் மாத்ரே – டெவால்ட் ப்ரூவிஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது.
விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 1 சிக்சர் 8 பவுண்டரியுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ப்ரூவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்களும், தோனி 17 பந்துகளில் 16 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 187 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்றி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
19 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சனுடன் – வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 41 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யவன்ஷி 33 பந்துகளில் 4 சிக்சர் 4 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.
துருவ் ஜுரெல் 31 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மேயர் 12 ரன்களும் சேர்க்க 17.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி பெற்றுள்ள 10 ஆவது தோல்வி இது என்பது கவனிக்கத்தக்கது.
May 20, 2025 11:27 PM IST


