• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : சிஎஸ்கே-விற்கு தொடரும் சோகம்… சேப்பாகத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்

GenevaTimes by GenevaTimes
April 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : சிஎஸ்கே-விற்கு தொடரும் சோகம்… சேப்பாகத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 11, 2025 9:36 PM IST

சிஎஸ்கே ஐபிஎல் 18 வது சீசனில் 5 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று பரிதாப நிலையில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் காயம் காரணமாக விலகிய நிலையில் தோனி கேப்டனாகி, கேகேஆருக்கு எதிராக தோல்வி அடைந்தது.

News18News18
News18

ஐபிஎல் தொடரின் 25 ஆவது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 9 விக்கெட்களை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது.

ஐபிஎல் 18 வது சீசனில் சிஎஸ்கே தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சென்னை 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் பரிதாப நிலையில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து இருந்தது.

ருத்துராஜ் கெய்க்வாட் விலகி நிலையில் கேப்டன் பொறுப்பு மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்டது. தோனியின் கேப்டன்ஷிப்பில் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும் என சேப்பாக்த்தில் ரசிகர்கள் குவிந்தனர். தோனியின் கேப்டன்ஷிப் சேப்பாக்கம் அதிர போகிறது என்று ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு சோகமே மிஞ்சியது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பாதாளத்திற்கு சென்று விட்டது.

சேப்பாகத்தில் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.சிஎஸ்கே அணியில் ருத்துராஜ்க்கு பதிலாக திரிபாதியும் முகேஷ் சவுதிரி பதிலாக அன்சுல் கம்போஜ் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா – டெவான் கன்வே களமிறங்கினர். கம்பேக் கொடுக்கும் என்று நினைத்த சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. 72 ரன்களுக்கு சிஎஸ்கே 7 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் 9 ஆவது வீரராக மைதானத்திற்குள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வீறுநடை போட்டு வந்தார். தோனி ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகளையாவது அடித்து ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் 4 பந்துகளில் 1 ரன் மட்டும் சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டாகி வந்த வேகத்தில் மீண்டும் பெவிலியன் திரும்பினார். இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

Location :

Chennai,Tamil Nadu

First Published :

April 11, 2025 9:36 PM IST

Read More

Previous Post

Tamil Live Breaking News : நாளை சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

Tamilmirror Online || கெஹெலிய மீண்டும் சி.ஐ.டி.யில் முன்னிலை

Next Post
Tamilmirror Online || கெஹெலிய மீண்டும் சி.ஐ.டி.யில் முன்னிலை

Tamilmirror Online || கெஹெலிய மீண்டும் சி.ஐ.டி.யில் முன்னிலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin