• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : சாய் சுதர்சன் அரைச்சதம்.. மும்பை வெற்றிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : சாய் சுதர்சன் அரைச்சதம்.. மும்பை வெற்றிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 29, 2025 9:38 PM IST

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை யார் பெறப்போவது என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

சாய் சுதர்சன்சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கி உள்ளனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 63 ரன்கள் குவித்தார்.

மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 220 ரன்களுக்கும் அதிகமாக குஜராத் அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவர்களில் மும்பை பவுலர்கள் திறமையாக வீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை யார் பெறப்போவது என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் இணை அற்புதமாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தது.

38 ரன்கள் எடுத்திருந்தபோது கில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவரை தொடர்ந்து ஜாஸ் பட்லர் 31 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்த சாய் சுதர்சன் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்தவர்களில் ரூதர் போர்டு மட்டும் 2 சிக்ஸருடன் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 196 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க – IPL 2025 | 137 கோடி பார்வையாளர்கள்..! புதிய உச்சத்தை எட்டிய ஜியோஹாட்ஸ்டார்

மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வலுவான வீரர்கள் இருப்பதால் மும்பை அணியின் பேட்டிங் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

March 29, 2025 9:28 PM IST

Read More

Previous Post

‘இந்திய வங்கித் துறையின் நெருக்கடிக்கு பாஜக அரசு வழிவகுத்தது எப்படி?’ – ராகுல் காந்தி விவரிப்பு | Rahul Gandhi targets BJP over loan write-offs: Cronyism behind banking crisis

Next Post

நிலநடுக்க காரணம் முதல் தற்காப்பு வரை: மியான்மர் பூகம்பத்தை முன்வைத்து நிபுணர்கள் சொல்வது என்ன? | What to know about earthquakes like Myanmar Causes impact and why they strike explained

Next Post
நிலநடுக்க காரணம் முதல் தற்காப்பு வரை: மியான்மர் பூகம்பத்தை முன்வைத்து நிபுணர்கள் சொல்வது என்ன? | What to know about earthquakes like Myanmar Causes impact and why they strike explained

நிலநடுக்க காரணம் முதல் தற்காப்பு வரை: மியான்மர் பூகம்பத்தை முன்வைத்து நிபுணர்கள் சொல்வது என்ன? | What to know about earthquakes like Myanmar Causes impact and why they strike explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin